ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:03 IST)

பாஜக-வின் பருப்பு கர்நாடகாவில் வேகாது: சித்தராமையா அதிரடி!!

பாரதிய ஜனதா நாடு முழுவதும் தங்களது கட்சியை பலப்படுத்த பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பாகமாக பாஜக மூத்த தலைவர் அமித்ஷா சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார்.


 
 
இது குறித்து கர்நாடக முதலைமைச்சர் சித்தராமையா அதிரடி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கர்நாடகாவில் பாஜக-வை பலப்படுத்த அமித்ஷா வந்து உள்ளதாக சொல்கிறார்கள். 
 
ஆனால், கர்நாடகத்திற்கு அமித்ஷா வந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி வந்தாலும் சரி பாரதிய ஜனதா ஆட்சிக்கு வர முடியாது. அமித்ஷா இங்கு வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த பயமும் இல்லை.  
 
அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் கர்நாடகத்தில் எடுபடாது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என தெரிவித்துள்ளார்.