வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (22:31 IST)

”ஜெயலலிதா வழக்கில் அவசரப்பட்டு மேல் முறையீடு செய்ய கூடாது” - ஜெய்ராம் ரமேஷ்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அவசரப்பட்டு மேல் முறையீடு செய்ய கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் வழக்கில் அவசரப்பட்டு மேல் முறையீடு செய்ய கூடாது. அதேபோல், அவசரப்பட்டு மேல் முறையீடு செய்யாமலும் இருக்கக் கூடாது. வழக்கை அனைத்து கோணங்களிலும் ஆராய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு” என்று தெரிவித்தார். 
 
மேலும் அவர் கூறுகையில், “கர்நாடக அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கு ரீதியாக பார்த்தால் 90 நாட்கள் அவகாசம் உள்ளது. 11 நாட்கள் முடிந்த நிலையில், கர்நாடக அரசு கால தாமதம் செய்கிறது என்று நீங்கள் கூறுவது நியாயமற்றது.
 
தீர்ப்பில் முரண்பாடுகளும் குளறுபடிகளும் இருப்பதாக தகவல் உள்ளது. எனவே இறுதியில் சட்டத்தின் படி சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த முடிவாக இருந்தாலும், சிறந்த சட்ட ஆலோசனைக்கு பிறகே மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.