வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (14:37 IST)

குண்டு அடிப்பட்ட யானை உதவிக்காக மனிதர்களிடம் தஞ்சம்

ஜிம்பாவே நாட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் யானை ஒன்று மருத்துவ உதவிக்காக மனிதர்கள் இருக்கும் விடுதிக்கு சென்றுள்ளது.


 

 
ஜிம்பாவே நாட்டின் மேற்கு மாகாணம் மலைப்பகுதியில் அமைந்துள்ள மஷோனாலேண்ட் சுற்றுலா பகுதியில் ஏராளமான ஓய்வு விடுதிகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் உள்ள காட்டு யானை ஒன்று துப்பாகி குண்டு அடிப்பட்டு மலை மீதுள்ள ஓய்வு விடுதி ஒன்றுக்கு சென்று மருத்துவ உதவிக்காக கதவை தட்டியுள்ளது.
 
வாடிக்கையாளர்கள் என ஒய்வு விடுதி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது யானை பரிதாபமான நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளது. உடனே அந்த ஊழியர்கள் கால்நடை மருத்துவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.
 
ஒய்வு விடுதியில் இருந்து 200 மைல் தொலைவில் இருந்த கால்நடை மருத்துவர் வருவதற்கு சுமார் 6 மணி நேரம் ஆகியுள்ளது. அதுவரை தாக்குப்பிடித்த யானைக்கு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
காட்டில் வேட்டை குபல்கள் யானையை சுட்டிருக்கல்லம் என்று கருதப்படுகிறது. மேலும் அந்த யானை உதவிக்காக மனிதர்கள் இருக்கும் இடத்தை நாடி சென்றது அதிர்ச்சியான வியப்பை ஏற்படுத்தியுள்ளது.