1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (20:55 IST)

’சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்’ - சொந்த கட்சிக்கு எதிராக சசி தரூர் கருத்து

சபரிமலையில் வயது பெண்களை அனுமதிக்க வேண்டும். இது தனது தனிப்பட்ட கருத்து என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் கூறியுள்ளார்.
 

 
சபரிமலையில் வயது பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கேரள மாநில அரசு சம்பிரதாயங்களை மாற்றக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய சசிதரூர், ”பெண்கள் ஏன் கோவிலுக்குள் செல்லக்கூடாது? எந்த அடிப்படை காரணத்தினால் பெண்கள் கோவிலுக்குள் செல்வதை தடை செய்கிறீர்கள்?

உங்களுடைய லாஜிக் என்ன? பெண்கள் கோவிலுக்குள் செல்லவதும் அல்லது செல்லாமல் இருப்பது அவர்களது சொந்த விருப்பம். சமூக நடவடிக்கைகளில் புனிதத் தன்மை எதுவும் கிடையாது.

சமூக ஆச்சாரங்களில் மாற்றப்படக்கூடாதது என்று எதுவும் இல்லை. 1930 வரை தலித்துகள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை.
 
மனிதர்கள் செல்வதால் தெய்வ சக்தி குறைந்து விடும் என்று நான் கருதவில்லை. கடவுளை வணங்குவதிலும், கோயிலுக்கு செல்வதிலும் எல்லாவருக்கும் சம உரிமை உண்டு.
 
இனம், வயது, ஆண் பெண் வித்தியாசம் என்ற பெயரில் பாகுபாடு இருக்க கூடாது. இது அனைத்தும் தனது தனிப்பட்ட கருத்து” என்று கூறியுள்ளார். தெரிவித்தார்.