1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (11:07 IST)

இரண்டாவது நாளாக சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிருப்தி!

Share Market
கடந்த வாரம் பங்குச்சந்தை நான்கு நாட்கள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்ற நிலையில் இந்த வாரம் நேற்று சென்செக்ஸ் குறைந்த நிலையில் இன்றும் சரிந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் உள்ளது என்பதும் சற்று முன் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 180 புள்ளிகள் சரிந்து 54 ஆயிரத்து 200 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 65 புள்ளிகள் சரிந்து 16149 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தை மீண்டும் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது