Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பினாமிக்கு வெட்கமில்லாமல் ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் - கொந்தளிக்கும் கட்ஜூ


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 9 மார்ச் 2017 (18:20 IST)
குற்றவாளிகளுக்கு, வெட்கமில்லாமல் ஆதரவு அளிக்கும் அதிமுக கைப்பாவை எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

 

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கட்ஜூ, “தமிழர்களே! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தங்களது வீரதீரச் செயல்கள் மூலம் நாட்டையே நீங்கள் வியக்க வைத்தீர்கள். தற்போது, அதே போன்றதொரு மீண்டுமொரு வீரதீரச் செயல்கள் புரிய  வேண்டும் என இந்தியா முழுவதும் விரும்புகிறது.

ஊழல் வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள குற்றவாளி சிறைப்பறவைகளுக்கு, வெட்கமில்லாமல் ஆதரவு அளிக்கும் அதிமுக கைப்பாவை எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்பு சட்டப்பூர்வமாகவும், அமைதியான முறையிலும் நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்கள் எங்கு சென்றாலும், அங்கெல்லாம் அவர்களுக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவர்களை சமூகத்தில் புறக்கணிக்க செய்வதுடன், எந்த இடத்திற்கும் அவர்கள் அழைக்கப்படக்கூடாது.

சோழர்களின் வழிவந்த வலிமைமிக்க தமிழ் மக்களின் கோபத்தை எம்.எல்.ஏ.,க்கள் உணரச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :