1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (18:37 IST)

இடைத்தேர்தல் முடிவுகள் காவி கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது - ஷகீல் அகமது

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையாத நிலையில், பிரித்தாளும் அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
 
இடைத்தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது:
 
இந்தத் தேர்தல் முடிவு காவி கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. மக்கள் அக்கட்சியை புறக்கணித்துள்ளனர். அதற்குக் காரணம் அவர்களது பிரித்தாளும் அரசியல்.
 
மோடி அரசு அமைந்த 100 நாட்களிலேயே அக்கட்சி எதிர்ப்பு அலைகளை சந்தித்திருக்கிறது. மக்களுக்கு பாஜகவின் ஆட்சியும், மோடியின் அரசியலும் பிடிக்கவில்லை.
 
பிரதமர் மோடி அமைதியாக இருந்தால்கூட அவரது அமைச்சர்கள் சிலரும், கட்சியின் தலைவர்கள் சிலரும் அறிக்கைகள் வாயிலாக பிரிவினை அரசியலை செய்து வருகின்றனர்.
 
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், தற்போது இந்த இரண்டு மாநிலங்களிலுமே காங்கிரஸ் எழுச்சி கண்டுள்ளது. இனி, எங்கள் கட்சியை மேலும் பலப்படுத்துவோம்.
 
ஓர் அரசு அமைந்து 100 நாட்களுக்குள்ளதாகவே மக்களின் எதிர்ப்பு அலைகளை சம்பாதித்துள்ளது இதுவே முதல் முறையாகும். என்றார் அவர்.
 
உ.பி. மாநில தேர்தல் முடிவு குறித்து கூறும்போது, "மாநிலத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட கட்சிக்கு அம்மாநில மக்கள் தற்போது முழு அதிகாரத்தையும் அளித்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்" என்றார்.