பட்டபகலில் ஓலா கேப்பில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்!!

Last Updated: புதன், 6 டிசம்பர் 2017 (16:35 IST)
பெங்களூரில் ஓலா கேப்பில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு ஓலா கார் டிரைவர் மிகவும் மோசமாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் டிரைவர் மீது புகார் அளித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவர் இன்று காலை ஓலா வாகனத்தில் பயணித்துள்ளார். பௌஅணத்தின் போது கார் டிரைவர் பாலியல் ரீதியாக அந்த பெண்ணுக்கு நிறைய தொல்லைகள் கொடுத்து இருக்கிறார்.

அதுவும் குழந்தைகள் தெரியாமல் கார் கதவை திறந்துவிடக் கூடாது என பாதுகாப்பு கருதி வழங்கப்பட்ட சைல்ட் லாக் வசதியின் மூலம் அந்த பெண்ணை காரைவிட்டு வெளியே செல்லாதபடி அடைந்துள்ளார்.

இதனால், தப்பிக்க வழியின்றி செய்வதறியாது போராடியுள்ளார் அந்த பெண். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டுள்ளார். தற்போது அந்த டிரைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது. அவசரத்திற்காக பயன்படுத்தப்படும் இம்மாதிரி சேவைகளால் பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாம் போகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :