1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (17:41 IST)

பாலியல் வழக்கு.! நடிகர் முகேஷை கைது செய்ய தடை.,!!

Mukesh
பாலியல் புகாரில் தனக்கு முன் ஜாமீன் கோரி நடிகர் முகேஷ் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவரை அடுத்த 5 நாட்களுக்கு கைது செய்ய தடை விதித்து எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித் மீதும், மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.
 
நடிகை மினுமுனீர்  நடிகர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.  இந்த புகார்கள் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
நடிகர் முகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரியும் கேரள மாநில இளைஞர் காங்கிரசார் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் முகேஷை அடுத்த 5 நாட்களுக்கு கைது செய்ய தடை விதித்து எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.