1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (10:55 IST)

விடாமல் பற்றி எரியும் காட்டுத்தீ - ஏராளமான விலங்குகள் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் விடாமல் தொடர்ந்து 5 நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெயில் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் தீ பரவியது. இதில் ஏராளமான மூலிகை மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் செல்போன் டவர்கள் சேதமடைந்தன. தொடர்ந்து 5 வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இந்த தீவிபத்தில் சிக்கி ஏராளமான வனவிலங்குகள் இறந்துள்ளன. புகை மூட்டம் காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக தீயை அணைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.