ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (15:28 IST)

காட்டுமிராண்டிதனமாக பலாத்காரம், கொடூர கொலைகள்... திக் திக் கிரைம் ஸ்டோரி!

மதிய வேளையில் பெண்களை அடித்து, பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து வந்த சைகோ சீரியல் கில்லர் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 
 
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி புதுல் மக்ஜி என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இந்த வழக்கை விச்சரித்த போலீஸார் சர்க்கார் என்பவனை கைது செய்தனர். அவனை 12 நாட்கள் கஸ்டடியில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். 
 
இந்த 12 நாட்கள் விசாரனை பல திடுக்கிடும் தகவல்களை சர்க்கார் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான். இந்த சைகோ மத்திய நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து இவ்வாரு செய்து வந்துள்ளான். 
 
ரெட் மோட்டார் பைக் மற்றும் ரெட் ஹெட்மெட்டுடன் பயணித்து தனக்கு ஏற்றவாரான வீட்டை தேர்வு செய்து நோட்டமிடுவான். பின்னர் சமயம் பார்த்து வீட்டிற்கு சென்று காலிங்பெல் அடிப்பான். வீட்டில் இருக்கும் பெண் வந்து கதவை திறந்ததும் கொடுரமாக தாக்குவான். 
அதாவது சைக்கிள் செயின், இரும்பு ராடினால் அடித்து காயப்படுத்தி பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வான். கொலை என்பது மிக கொடூரமாக இருக்கும், கனமான இரும்பு பொருட்களால் பெண்ணை அடித்து கொலை செய்வான். 
 
பின்னர் வீட்டில் இருக்கும் நகை பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, மீண்டும் பெண்களின் தலையில் பலமாக தாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்னரே அங்கிருந்து செல்வானாம்.
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான், ஹூக்லி ஆகிய மாவட்டங்களில் பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளையும் செய்துள்ளான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.