குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை; சட்டம் நிறைவேற்றிய ஹரியானா
ஹரியானா சட்டசபையில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து அவருகிறது. அதுவும் குறிப்பாக குழந்தை வன்கொடுமை அதிகளவில் உள்ளது. இதனால் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது ஹரியானா மாநிலத்தில் இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிகும் சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.