செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (11:52 IST)

சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன் அகால மரணம்! – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Sekar Reddy
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் உள்ளவர் சேகர் ரெட்டி. இவரது மகளுக்கும் தேவஸ்தான நிர்வாக அதிகாரியின் மகன் சந்திரமவுலி என்பவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டது.

வரும் ஜனவரி 26ல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சென்னையில் நடைபெற இருந்த திருமணத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாக இருந்தது. இந்நிலையில் நண்பர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற சந்திரமவுலி திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த சூழலில் நடந்த இந்த சம்பவம் சேகர் ரெட்டி குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edited By Prasanth.K