Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசம் எதிரொலி: தோனி, விராட் வீட்டிற்கு பாதுகாப்பு


sivalingam| Last Modified திங்கள், 19 ஜூன் 2017 (05:52 IST)
நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில் ஒருசில கிரிக்கெட் வெறியர்கள் தோனியின் வீட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் உடனடியாக தோனியின் இல்லத்தின் முன்பு பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


 


இந்த போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் இந்த படுதோல்வியை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. இந்திய ரசிகர்கள் ஆங்காங்கே வீரர்களின் உருவ படங்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை காட்டினர்.

வெற்றி, தோல்வி விளையாட்டில் சகஜம் என்றாலும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விராட்கோஹ்லி உள்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் பொறுப்பின்றி விளையாடியது அனைவரையும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் ரசிகர்களிடம் இருந்து காப்பாற்ற தோனி, விராட்கோஹ்லி வீடுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  2007 உலகக்கோப்பை தோல்வியின்போது அப்போது அணியில் இடம்பெற்றிருந்த தோனியின் வீடு ரசிகர்களால் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :