1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 ஏப்ரல் 2018 (21:37 IST)

பள்ளத்தில் விழுந்த பள்ளி பேருந்து: 30 பேர் பலி

இமாச்சால பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து மாணவர்கள் உட்பட 30 பேர் பலியாகியுள்ள சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இமாச்சால பிரதேசத்தில் நூர்பூர் தொகுதியில் உள்ள மால்க்வால் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  
 
ஆசிரியர்கள் உட்பட 60 பேருடன் பேருந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இதில் 27 மாணவர்கள் மற்றும் பேருந்தின் ஓட்டுநரான 67 வயதான மதன் லால் மற்றும் இரண்டு ஆசிரியைகள் என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். 
 
இந்த தகவலை போக்குவரத்துத்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் உறுதி செய்துள்ளார். மேலும், காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.