வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (20:05 IST)

வங்கிக் கணக்கில் 95ஆயிரம் கோடி எப்படி வந்தது?; அசிர்ச்சியடைந்த ஏழைப் பெண்

பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட உள்ள வங்கி கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி ரூபாய் இருந்ததை கண்டு ஏழைப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 

 
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரை அடுத்த விகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா யாதவ், என்பவர் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் ரூ 2,000 கொண்டு வங்கி கணக்கைத் தொடர்ந்துள்ளார்.
 
இந்நிலையில், சமீபத்தில் இவரது கைப்பேசிக்கு வங்கி கணக்கில் 95,71,16,98,647 ரூபாய் இருப்பதாக குறுந்தகவல் வந்துள்ளது. அதனை அடுத்த மறுபடியும் இரண்டு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ஒன்றில், 9,99,999 ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும், மற்றொன்றில், 9,97,000 ரூபாய் எடுக்கப்பட்டது என்றும் வந்துள்ளது.
 
உடனடியாக இது குறித்து அந்த பெண்மணி வங்கி அதிகாரி லல்தா பிரசாத் திவாரி என்பவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். வங்கி அதிகாரிகள் ஒரு மிக வினோதமான விளக்கத்தை கொடுத்துள்ளனர்.
 
அதாவது, ஊர்மிளாவின் வங்கி கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றும் கணக்கைத் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து பராமரிக்க பணம் எதுவும் வைத்திருக்கவில்லை என்றும் அதனால் வங்கி அவருடைய கணக்கில் பணம் செலுத்தப்பட்டதைப் போன்று உருவாக்கியதாகவும் கூறியுள்ளது.
 
மேலும் அவர்கள், இது போன்று ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையை செலுத்துவதோ, எடுப்பது என்பது மந்திரம் போன்ற விசித்திரமான நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்றும் கூறுயுள்ளனர்.
 
ஆனால், ’வங்கியின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்’ உள்ளூர் கணக்காளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊர்மிளா யாதவ், தனது அசல் தனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்’ என்று தெரிவித்துள்ளார்.