திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (12:33 IST)

பான் - ஆதார் இணைப்பு: எஸ்பிஐ வைத்த செக்!

பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று எஸ்.பி.ஐ அதிரடியாக அறிவித்துள்ளது.
 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று எஸ்.பி.ஐ அதிரடியாக அறிவித்துள்ளது.
 
செப்டம்பர் 30-க்குள் இதை செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் யாராவது இதைச் செய்யாவிட்டால் பரிவர்த்தனையில் சிக்கல்கள் ஏற்படும் எனவும், ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் கணக்கில் டெபாசிட் செய்ய பான் எண் இருப்பது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.