தொடர் அதிருப்தி எதிரொலி! அபராத அறிவிப்பை வாபஸ் பெறுகிறதா எஸ்பிஐ?


sivalingam| Last Updated: வெள்ளி, 10 மார்ச் 2017 (07:55 IST)
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட்  வங்கி கடந்த வாரம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் ஒரு அறிவிப்பினை அறிவித்தது.  வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதுதான் இந்த அறிவிப்பு. இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. மத்திய அரசும் இந்த அறிவிப்பினை வாபஸ் பெறும்படி வங்கியை கேட்டுக்கொண்டது.

 
இந்நிலையில் வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய எஸ்.பி.ஐ., தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, 'மத்திய அரசிடம் இருந்து, இதுவரை அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை; ஒருவேளை மத்திய அரசிடம் இருந்து கோரிக்கை வந்தால், வங்கி பரிசீலனை செய்யும் என்று கூறியுள்ளார்.  இதையடுத்து அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :