1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 12 மார்ச் 2020 (18:10 IST)

yes பேங்கின் பங்குகளை ரூ. 7250 கோடிக்கு வாங்கவுள்ள SBI Bank

yes பேங்கின் பங்குகளை 7250 கோடிக்கு வாங்கவுள்ள SBI Bank

யெஸ் வங்கி நிறுவனத்தின் 7250 கோடி பங்குகளை வாங்குவதற்கு கடன் வழங்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
 
யெஸ் வங்கியின் பங்குகளை ரூ. 10 விலையில் வாங்குவதற்கு, நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
 
சமீபத்தில் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரிசர்வ் வங்கி மறுசீரமைப்பு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. 
 
இந்நிலையில், இன்றைய பங்குச் சந்தை நிலவரங்களுக்கு பிறகு தாக்கல் செய்ததில், நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழு எஸ்,பி.ஐ வங்கி இந்த முடிவை அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.