ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசி கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்
ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசி கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைக்கு செல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக தினமும் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவோர் நிலைமை பரிதாபமாக உள்ளது. வெளியே வேலைக்குச் செல்ல முடியாமலும் வீட்டில் இருக்கும் குடும்பத்தினர்களின் பட்டினியை பார்த்து பொறுக்கமுடியாமல் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பு போல் உள்ளனர்
இந்த நிலையில் நல்ல உள்ளம் படைத்த பலர் ஏழை எளியவர்களுக்கு தாராளமாக உதவி செய்து வருவது மனிதத் தன்மையை காட்டுவதாகத் தெரிகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அவர்கள் ஒரு ஆறுதலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வேலை இழந்து உள்ள பின்தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஏழை எளியவர்களின் மனம் குளிர்ந்து உள்ளது
இதேபோல் பிற கிரிக்கெட் வீரர்களும் செல்வந்தர்களும் திரைப்பட நடிகர் நடிகைகளும் தொழிலதிபர்களும் ஏழை எளியோருக்கு உதவி செய்து அவர்களின் பசியை போக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கபப்டும் நபர்களை விட பட்டினியால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகமாகி விடும் அவல நிலை இந்தியாவில் ஏற்படக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது