1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (07:30 IST)

பாஜக தலைவர்களின் தொடர் மரணத்திற்கு இதுதான் காரணமா? சாத்வி பிரக்யா பகீர் தகவல்

கடந்த சில மாதங்களாக பாஜகவின் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக மரணமடைந்து கொண்டிருப்பதற்கு தீய சக்திகளை ஏவி விட்டதே காரணம் என பாஜக எம்பி சாத்வி பிரக்யா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
கடந்த சில மாதங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் அடுத்தடுத்து உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்கள்
 
 
இவ்வாறு பாஜகவின் மூத்த தலைவர்கள் அண்மையில் மரணமடைந்து கொண்டிருப்பதற்கு அவர்களது உடல் நிலையே காரணம் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் பாஜக எம்பி சாத்வி பிரக்யா ஒரு புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தன்னிடம் குருமகராஜ் ஒருவர் 'பாஜகவிற்கு கெட்ட நேரம் நெருங்கி விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் பாஜகவை அழிக்க தீய சக்திகளை ஏவிவிட்டு இருப்பதாகவும் இதன் காரணமாகத்தான் பாஜக தலைவர்கள் ஒவ்வொருவராக மரணமடைந்து கொண்டிருப்பதாகவும், நம்மிடம் நேரடியாக மோத முடியாத எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விட்டு நமது தலைவர்களின் உயிரை எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார் 
 
 
இவருடைய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. வயது முதிர்வு காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாகவும் மரணம் அடைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பிரக்யா பேசி மரணத்தையும் அரசியல் ஆக்குவதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்