புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:40 IST)

உண்மையான இந்துக்கள் 'பதான்' படத்தை பார்க்கக் கூடாது: பாஜக எம்.பி. பேச்சு

sathvi
உண்மையான இந்துக்கள் ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தை பார்க்க கூடாது என பாஜக எம்பி சாத்வி பிரக்யா அவர்கள் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த 'பதான்'  திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பாடலில் காவி உடை அணிந்த தீபிகா படுகோன் படுகவர்ச்சியாக தோன்றினார்.
 
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் அந்த படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் உண்மையான இந்துவாக இருந்தால் 'பதான்' படத்தை பார்க்கவும் கூடாது திரையிடவும் கூடாது என்று பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் கூறியுள்ளார் 
 
காவி நிறத்தை இழிவு செய்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran