புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:16 IST)

நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்த சசிதரூர்! மருத்துவமனையில் அனுமதி!

Sasitharoor
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் வழுக்கி விழுந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக படிக்கட்டில் வழுக்கி விழுந்ததை அடுத்து அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது 
 
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உள்ளனர். இந்த நிலையில் சசிதரூர் எம்பி தனது சமூக வலைத்தளத்தில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் 
 
அந்த பதிவில் நான் சற்று சிரமமாக உணர்கிறேன் என்றும் படிக்கட்டில் தவறி விழுந்த போது என் காலில் சுளுக்கு ஏற்பட்டது என்றும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran