Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சலுகைகள் ரத்து ; தொடர் உறவினர்கள் மரணம் : கண்ணீர் விட்டு கதறும் சசிகலா

வெள்ளி, 28 ஜூலை 2017 (11:53 IST)

Widgets Magazine

சமீபத்தில் இறந்து போன தனது அண்ணி சந்தானலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பரோல் கிடைக்காததாலும், சிறையில் தனக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டதாலும், கவலையில் சசிகலா கண்ணீர் வடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு 5 தனி அறைகள், சமையலறை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டிஐஜி ரூபா சமீபத்தில் கூறிய புகார் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மறுக்கப்பட்டு, சாதாரண சிறைக்கைதி போலவே அவரும் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் அவரின் அண்ணி சந்தானலட்சுமி மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா தரப்பில் பரோலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அவர் சசிகலாவின் இரத்த சம்பந்தம் இல்லை எனக் கூறி சிறை நிர்வாகம் பாரோல் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது.
 
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் அண்ணன் மகன் சகாதேவன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போதும் சசிகலா பரோலில் வெளியே வருவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. 
 
உறவினர்களின் தொடர் மரணம், சிறையில் சலுகைகள் ரத்து, குடும்பத்தை விட்டுப் போன ஆட்சி மற்று கட்சி என தொடர் சோதனைகளை சந்தித்து வருவதால், சிறையில் உள்ள சக பெண் கைதிகளிடம் துக்கத்தில் சசிகலா கண்ணீர் வடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜோதிடர் அறிவுரை ; திவாகன் செய்த விஷேச பூஜை : பின்னணி என்ன?

ஆஸ்தான் ஜோதிடரின் அறிவுரையை ஏற்று, பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோவிலில் நடந்த ...

news

அனைத்தும் உண்மையே; மன்னிப்பு கேட்க முடியாது - டிஐஜி ரூபா அதிரடி

சசிகலாவிற்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட விவகாரத்தில், தான் தனது கடமையே செய்ததாகவும், ...

news

உலக பணக்காரர் பட்டியல் - பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர்

உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ், மைக்ரோசாஃப்ட் ...

news

வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆண்கள் மீதான வரதட்சணை புகார் வந்தால் உடனடியாக எந்தவித விசாரணையும் இல்லாமல் குற்றம் ...

Widgets Magazine Widgets Magazine