புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (09:14 IST)

'சர்கார்' படத்தில் நடித்த நடிகர் திடீர் கைது!..ஏன் தெரியுமா?

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ய முயன்ற நடிகர் ஜெகதீஷ் என்ற ஜாக்கியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான 'சர்கார்: தி புல்லட்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரை சேர்ந்த சையது சமீர் என்ற தொழிலதிபருக்கு சக போட்டி தொழிலதிபர்களால் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது பாதுகாப்பிற்காக கள்ளத்துப்பாக்கி வாங்க முடிவு செய்தார். அப்போதுதான் நடிகர் ஜெகதீஷ் மற்றும் அவருடைய நணபர் ஒருவர் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்வதை கேள்விப்பட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டார்.

ஜெகதீஷ் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்வது குறித்த ரகசிய தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் ரகசியமாக கண்காணித்து துப்பாக்கி மற்றும் பணம் கைமாறும் நேரத்தில் இருவரையும் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது.