ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Updated : வியாழன், 12 மே 2016 (14:42 IST)

உம்மன் சாண்டி முதல்வரானால் என்னை குடும்பத்துடன் அழித்துவிடுவார்: சரிதா நாயர்

உம்மன் சாண்டி மீண்டும் முதல்வரானால் என்னை குடும்பத்துடன் அழித்துவிடுவார் என்று சரிதா நாயர் பரபரப்பு பேட்டி அளித்தார்.


 

கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் மற்றும் அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் மோசடிக்கு கேரள அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த விவகாரத்தில் முதல்வர் உம்மன்சாண்டிக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறின. மேலும் சரிதா நாயரின் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்த போது, முதல்வர் உம்மன் சாண்டிக்கும் பங்கு உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தன்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்தார்கள் என்றும், அவர்களை பற்றிய தகவல்களை  வெளியிட்டால் கேரள அரசியலில் பெரும் பூகம்பம் ஏற்படும்” என்று பீதியை கிளப்பியிருந்தார் சரிதா நாயர்.


இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதாநாயர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சரிதாநாயர் கூறியபோது, விசாரணை கமிஷன் முன்பு நான் தற்போது தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள் மூலம் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தண்டனை பெறுவது உறுதி. சோலார் பேனல் மோசடி உள்பட பல நில மோசடிகளிலும் உம்மன்சாண்டிக்கு இடைத்தரகராக செயல்பட்டு உள்ளேன். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் உம்மன்சாண்டி மீண்டும் வெற்றிபெற்றால் என்னையும், என் குடும்பத்தையும் அவர் அழித்து விடுவார் என்று கூறினார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்