செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (18:17 IST)

மக்களவை வெற்றி மாதிரி சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: சரத்பவார்

Sarath Pawar
மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த லோக்சபா தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி பெற்ற வெற்றியை போலவே, நாங்கள் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று  என்.சிபி அணியின் தலைவர் சரத்பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில், நேற்று கொலை செய்யப்பட்ட பாபா சித்திக், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) அணியைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதியாக இருந்தார், மற்றும் இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அவரது கொலையை கண்டித்து மஹா விகாஸ் அகாடி கூட்டணியின் முக்கிய தலைவர்கள், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் நானா படோல் மற்றும் என்.சி.பி. (சரத்பவார்) தலைவர் சரத்பவார், டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர்.

அப்போது, சரத்பவார் மகாராஷ்டிராவின் தற்போதைய மகாயுதி கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்தார். "நாட்டின் இந்த அரசு முறையாக செயல்படவில்லை, மக்கள் எங்களை மட்டுமே நம்புகிறார்கள். அவர்களுக்கு மாற்று ஆட்சியை கொடுக்கும் பொறுப்பு எங்களுடையது," என்றார்.

மேலும், பன்ஜாரா சமூகத்திற்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்ற மோடியின் குற்றச்சாட்டையும் மறுத்து, மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் வசந்த்ராவ் நாயக் செய்த சாதனைகளை நினைவுபடுத்தினார்.

Edited by Mahendran