1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (09:01 IST)

எதிர்ப்பு எம்.எல்.ஏக்களின் பிணம்தான் மராட்டியம் வரும்!? – சஞ்சய் ராவத் விடுத்த எச்சரிக்கை!

Sanjay Raut
மகாராஷ்டிராவில் எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களின் சடலங்கள்தான் மராட்டியம் வரும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்து வருகிறார். சமீப காலமாக சிவசேனா எம்.எல்.ஏவும் சட்டசபை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்களை தன்னுடன் சேர்த்து வருகிறார்.

இந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அசாமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆட்சிக்கு எதிராக திரும்பிய சிவசேனா எம்.எல்.ஏக்கள் குறித்து பேசியுள்ள எம்.பி சஞ்சய் ராவத் “அசாமில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் உயிருடன் இல்லை. அவர்களது உயிரற்ற உடல்களே மராட்டியத்திற்கு திரும்பும். அவர்களது ஆன்மாக்கள் முன்பே இறந்துவிட்டன. ஆன்மாக்கள் இல்லாத உடல்கள் நேரடியாக பிரேத பரிசோதனைக்காக மராட்டிய சட்டசபைக்கு அனுப்பப்படும்” என்று எச்சரிக்கும் தோனியில் அவர் பேசியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.