வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (13:44 IST)

மோடி மாஸ்க் அணியாததால் நானும் அணியவில்லை! – சர்ச்சை கிளப்பிய சஞ்சய் ராவத்!

பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மாஸ்க் அணியாததற்கு அளித்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோன பாதிப்பு குறைந்து வந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாசிக் நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ராவத் “பிரதமர் மோடியும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மாஸ்க் அணிவதில்லை. அதனால் நானும் அணியவில்லை” என கூறியுள்ளார். பொதுமக்களை மாஸ்க் அணிய சொல்லி வலியுறுத்திவிட்டு அரசியல்வாதிகள் மாஸ்க் அணியாமல் காரணம் சொல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.