Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டம்மி மம்மியிடம் பால் குடிக்கும் குட்டி புலிகள்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (15:24 IST)
தாய் புலியை இழந்து பரிதவிக்கும் புலி குட்டிகளின் ஏக்கத்தை தீர்க்க சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அதிகாரிகள் பொம்மை புலி ஒன்றை வைத்துள்ளனர்.

 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண் புலி, தனது 3 குட்டிகளையும் அனாதையாக விட்டு இறந்தது. 
 
குட்டி புலிகளின் பசி தீர்க்க பொம்மை புலியின் மடியில் பாட்டில் ஒன்றை பொருத்தி அதன் மூலம் பால் கொடுக்கப்படுகிறது. இதனால், குட்டிப் புலிகள் பொம்மை புலியை தாயாக கருதுகிறது.
 
இந்த முயற்சியின் மூலம், பிறந்த 40 நாட்களே ஆன இந்த புலி குட்டிகள் தாயில்லாமல் உயிர் பிழைக்க 80% வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :