வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூன் 2018 (11:08 IST)

2019 பாரளுமன்ற தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த அகிலேஷ் யாதவ்

தற்போதைய பாரளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 2019ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடையவுள்ளதால் 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் இப்போதில் இருந்து காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணி உருவாகும் என்றும், அந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் கூட்டணி முடிவாகும் முன்னரே முலாயம்சிங் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த வேட்பாளர் பட்டியலில் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முலாயம்சிங் யாதவ் உத்தரபிரதேசத்தில் உள்ள மைன்புரி தொகுதியிலும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் இந்த இரண்டு தொகுதிகளில் இருவரும் போட்டியிடுவது உறுதி என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன