Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி ரூபாய்!: திகைத்துப் போன எம்.எல்.ஏ. பாதுகாவலர்

Last Modified: வியாழன், 5 ஜனவரி 2017 (12:37 IST)

Widgets Magazine

தனது வங்கிக்கணக்கில் திடீரென 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதைக் கண்டு உ.பி. மாநில எம்.எல்.ஏ. ஒருவரின் பாதுகாவலர் காவல் துறையிடம் புகார் அளித்தார்.


 

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இர்பான் சோலங்கி என்பவரின் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் குலாம் ஜிலானி. இவர் கான்பூர் மால் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு ஏ.டி.எம். மையத்தில் தனது கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரத்தை எடுத்த பிறகு அவருக்கு அதற்கான வங்கி கணக்கு விபரம் கொண்ட ஸ்டேட்மெண்ட் வந்தது. 

அப்போது, தனது வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.100 கோடி இருப்பதாக பதிவாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜிலானி, உடனடியாக எம்.எல்.ஏ. சோலங்கிக்கு தகவல் அளித்தார். எம்.எல்.ஏ., உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கும்படி கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து கூறியுள்ள சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர் இர்பான் சோலங்கி கூறுகையில், ’என் நல்ல பெயரை கெடுக்க எதிரிகள் சதி செய்து இப்படி பணம் போட்டு இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது  ஜிலாயின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெ. மரணம் குறித்த நீதிபதி சந்தேகம் - வாய் விட்டு மாட்டிக்கொண்ட வைகோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி சந்தேகம் எழுப்பியதற்கு, வைகோ ...

news

பெயர் மாறுகிறதா அதிமுக தலைமை கழக அலுவலகம்? - சசிகலா அதிரடி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தின் பெயரை மாற்றுவது குறித்து, அதிமுக ...

news

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி: மேடவாக்கத்தில் பரபரப்பு

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன்(வயது 35). எலக்ரிக்கல் என்ஜினியரான இவர் ...

news

அமைச்சர்களுக்கு சசிகலா குடும்பத்தினர் போட்ட திடீர் உத்தரவு...

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் மற்ற அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தினமும் போயஸ் ...

Widgets Magazine Widgets Magazine