1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (12:14 IST)

விருதுகளை திரும்ப பெற முடியாது – சாகித்ய அகாடெமி அறிவிப்பு!

விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடெமி விருதுகளை சில எழுத்தாளர்கள் திருப்பி அளித்து வருகின்றனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. எழுத்தாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக இது போல சாகித்ய அகாடெமி விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாகித்ய அகாடெமி விருதை திரும்ப பெறுவது நடைமுறையில் இல்லை என சாகித்ய அகாடெமி அறிவித்துள்ளது. இதனால் எழுத்தாளர்கள் அளித்த விருதுகள் அவர்களிடம் திருப்பி அளிக்க தயாராக உள்ளதாகவும், அவர்கள் அளித்த விருதுப் பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்தாமல் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது சம்மந்தமாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.