திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (09:26 IST)

5 நாட்களுக்கு திறக்கப்படும் சபரிமலை கோயில்!

எடவம் மாத தொடக்கத்தை முன்னிட்டு சபரிமலை கோயில் இன்று முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மலையாள மாதமான எடவம் இன்று பிறக்கிறது. அதை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சபரிமலை கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களில் மாதாந்திர பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்படும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.