திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:28 IST)

சபரிமலை விவகாரம்: சீராய்வு மனு நவம்பர் 13ல் விசாரணை

சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 19 சீராய்வு மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கிய நிலையில் பெண்கள் ஒருசிலர் கடந்த சில நாட்களாக சபரிமலைக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். 
 
கடந்த 19 ந் தேதி வெட்டி பந்தாவிற்காக கோவிலுக்குள் செல்ல முயற்சித்த பாத்திமா உள்ளிட்ட சில பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பதற்றம் நிலவியது. 
 
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் வழக்கின் அவசர நிலையை மனதில் கொண்டு இந்த சீராய்வு மனு மீதான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தனர். இதுவைரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி இது சம்மந்தமாக தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்ந்த வரும் 13 ஆம் தேதி மாலை விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.