புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 டிசம்பர் 2018 (20:15 IST)

முஸ்லிம்களின் ஆண்மையை குறைக்க ஊசி? வைரலாகும் வாட்ஸ் ஆப் வதந்தி

சமீப காலத்தில் போலி செய்திகளை உருவாக்கி அதை வைரலாக்குவதர்கு வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாகும் போலி செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதாவது, முஸ்லீம்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டம்மை, ரூபெல்லா, சின்னம்மை போன்ற பாதிப்புகளுக்கு தடுப்பூசி போடுவதை தவிர்த்து விடுகின்றனராம். 
 
ஏனெனில் இந்த ஊசிகள் மூலம் அவர்களின் ஆண்மையை இழக்க செய்யும் என ஆதாரமற்ற போலி தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த ஊசியை போட்டால் முஸ்லீம் குழந்தைகள் 40 வயதாகும் போது குழந்தை பெறும் திறனை இழந்து விடுவர்களாம். 
 
இந்த வதந்தியால் மேற்கு உத்தரப் பிரதேசம், மீரட், பிஜ்னோர், மொரதாபாத் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பரப்படும் இந்த வதந்தியால் திடீர் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.