ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மே 2023 (17:23 IST)

எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்று சரியாகக் கூறும் ஜோதிடருக்கு ரூ.10 லட்சம் பரிசு- டாக்டர் அறிவிப்பு

கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறும் ஜோதிடருக்கு ரூ.10 லட்சம் பரிசளிக்கப்படும் என்று டாக்டர் ஒருவர் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி தேர்தல் பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியமைக்க வேண்டும் பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

இக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் சுயேட்சை  ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என பலரும், காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கர்நாடகாவின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே இம்மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில்,  கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த நரேந்திர நாயக் என்ற ஒரு மருத்துவர் வரும் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும்? காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? எந்தக் கட்சி ஆட்சியமைக்கும்? எத்தனை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்படுவர்? என்பது போன்ற 20 கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விகளை சரியாகக் கணித்துக் கூறும் ஜோதிடர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், இவர் 1991 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற சவால்கள் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.