வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:52 IST)

நிலவில் வெற்றிநடை போடும் ரோவர்... திட்டமிட்டபடி பயணம் செய்வதாக இஸ்ரோ தகவல்..!

நிலவில் வெற்றிகரமாக  விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலையில் அதிலிருந்து ரோவர் வெளியாகி நிலவில் வெற்றிகரமாக நடை போடுவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 
நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 3 வெண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிலையில்  நிலவின் புழுதி படலம் அடங்குவதற்காக காத்திருந்து அதன் பிறகு நான்கு மணி நேரம் கழித்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் கால் பதித்தது.
 
இந்த நிலையில் ரோவர் தனது பணிகளை சிறப்பாக தொடங்கி விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி லாண்டரில் பொருத்தப்பட்டுள்ள ILSA, RAMBHA மற்றும் ChaSTE ஆகிய கருவிகளும் தனது பணிகளை தொடங்கி விட்டதாகவும் இனி நிலவில் உள்ள பல மர்மங்கள் வெளியே வரும் என்றும் கூறப்படுகிறது.  
 
மேலும் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva