வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (15:19 IST)

ஆட்டுக்குட்டியை காப்பாற்ற புலியோடு போராடிய இளம்பெண் - வைரல் புகைப்படம்

தான் வளர்த்த செல்ல ஆட்டுக்குட்டியை உண்ண வந்த புலியுடன் போராடி மீட்ட இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 
புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீர தமிழச்சி என நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், அது உண்மையாக நடந்துள்ளது. ஆனால், அது தமிழகத்தில் அல்ல. அந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
 
அந்த மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தில், சகோலி அருகேயுள்ள உஸ்கான் எனும் கிராமத்தில் வசிப்பவர் ரூபாலி மெஸ்ராம். இவர் ஒரு ஆட்டுக்குட்டியை பாசமாக வளர்ந்து வந்தார். வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ஆட்டுக்குடியை சாப்பிட ஒரு புலி ஒன்று வந்துள்ளது. ஆட்டுக்குட்டியின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ரூபாலி பார்த்த போது, ஆட்டுக்குட்டி புலியின் பிடியில் இருந்தது. 

 
ஆனால், பயப்படாத அவர் அங்கிருந்து கம்பை எடுத்து புலியை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு ஒடிவந்த அவரின் தாயாரும் புலியை தாக்கினார். அவர்கள் இருவரும் தொடுத்த தாக்குதலில் நிலை குலைந்த புலி, ஆட்டுக்குட்டியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது. ஆனால், புலி தாக்கியதில் ரூபாலிக்கும், அவரின் தாய்க்கும் உடம்பில் காயம் ஏற்பட்டது.
 
அந்தப் புகைப்படத்தை தனது முகநூலில் ரூபாலி வெளியிட்டிருந்தார். இதைக்கண்ட பலரும் நீயும், உன் தாயும் வீரப்பெண்மணிகள் என பாராட்டி வருகின்றனர். ரத்த காயங்களுடன் நிற்கும் ரூபாலியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.