திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (18:49 IST)

அமைச்சர் ஆனதால் தலைமை செயலகத்தில் ரோஜா நடத்திய சிறப்பு பூஜை!

roja
நடிகை ரோஜா சமீபத்தில் அமைச்சர் ஆனதை அடுத்து தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்
 
நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தின் இளைஞர் நலத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக சமீபத்தில் பதவியேற்றார் 
 
இதனை அடுத்து அவர் இன்று அமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிய தொடங்கினார் 
 
முன்னதாக தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அமைச்சரின் அலுவலகத்தில் சிறப்பு பூஜை நடத்தினார். இந்த பூஜையில் ரோஜா கணவர் செல்வமணி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது