1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (07:17 IST)

ரோஹிங்கியா மக்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. உபி முதல்வர்

மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் அடித்து விரட்டப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் அகதிகளாக நுழைய முயற்சித்து வருகின்றனர்.



 
 
ரோஹிங்கியா மக்களை அனுமதிக்க இந்தியா மறுத்துள்ளதோடு, ஏற்கனவே 'இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் ரோஹிங்கியா மக்கள் நாற்பதாயிரம் பேரையும் நாடுகடத்தும் திட்டத்தில் இந்தியா உள்ளதாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ''ரோஹிங்கியா மக்களைப் பற்றி தங்களது நிலைப்பாட்டை இந்திய அரசு தெளிவாக அறிவித்துவிட்டது. இந்தியாவுக்கு வரும் ரோஹிங்கியா இன மக்கள் அகதிகளே அல்ல. அவர்கள் அழையாமல் நாட்டுக்குள் நுழைபவர்கள். அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிலர் அவர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருவது வருத்தத்திற்குரியது. அவர்களுக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.