திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (14:24 IST)

குஜராத் தேர்தல்: ஜடேஜா மனைவி ரிவாபா வெற்றி!

jadeja
குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து குஜராத் மாநிலத்தில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள வடக்கு ஜாம் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஆரம்பத்தில் பின்னணியில் இருந்தாலும் அதன் முன்னணியில் இருந்து தற்போது அவர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆரம்பத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த ரிவாபா பின்னர் படிப்படியாக முன்னிலை பெற்று தற்போது வெற்றி பெற்று விட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இந்த தொகுதியில் ரிவாபா ஜடேஜாவை எதிர்த்து அவரது மாமனார் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran