செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (10:41 IST)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் … இரண்டாவது நாளாக போராட்டம்!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

மத்திய பிரதேசம் நிவாடி மாவட்டத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது புராபுஜுர்க் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் என்ற 3 வயது சிறுவன் புதிதாக தோண்டப்பட்டு  இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார்.கிணற்றில் 100 அடியில் தண்ணீர் உள்ளதால் சிறுவன் எத்தனை அடி ஆழத்தில் சிக்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அவனை மீட்கும் பணிகள் இன்று அதிகாலையில் இருந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று முழுவதும் நடந்த போராட்டத்தை அடுத்து இன்றும் இரண்டாவது நாளாக மீட்புப் படையினர் சிறுவனை உயிருடன் மீட்க போராடி வருகின்றனர்.