1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (13:17 IST)

நாங்க எந்த நிலத்தையும் வாங்கல.. விவசாயமும் பண்ணல! – டவர் தாக்குதலால் அறிக்கை விட்ட ரிலையன்ஸ்!

பஞ்சாபில் ரிலையன்ஸ் டவர்கள் தாக்கப்பட்ட நிலையில் தங்கள் நிறுவனம் நேரடி விவசாயத்தில் ஈடுபடவில்லை என ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானாவிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த வேளாண் சட்டங்களால் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்க உள்ளதாகவும், இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடி கொள்முதல், விவசாயம் உள்ளிட்டவற்றில் ஈடுபட போவதாகவும் விவசாயிகளிடையே தகவல்கள் பரவியதால் கார்ப்பரேட் நிறுவன பொருட்களை சேதப்படுத்தி வருகின்றனர்.

பஞ்சாபில் 1500க்கும் மேற்பட்ட ஜியோ செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ‘ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் முகவர்கள் மூலமாக மட்டுமே உணவு பொருட்களை வாங்குவதாகவும், நேரடி கொள்முதல் செய்யவில்லை என்றும், நேரடி விவசாயம் செய்யும் எண்ணம் ரிலையன்ஸ்க்கு தற்போதும், எதிர்காலத்திலும் என்றும் இருந்ததில்லை என்றும், விவசாயத்திற்காக ரிலையன்ஸ் நிலம் வாங்கியதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.