Unlock 4.0: செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் புதிய தளர்வுகள் என்னென்ன?
நான்காம் கட்ட அன்லாக்கில் என்னென்ன தளர்வுகள் வழங்கப்படலாம் என யூகிக்கப்படுபவை விவரம் இதோ...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அனலாக் 1, 2, 3 ஆகியவைகளில் ஏகப்பட்ட தளர்வுகளை மத்திய மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடைகள், ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் நான்காம் கட்ட அன்லாக்கில் என்னென்ன தளர்வுகள் வழங்கப்படலாம் என யூகிக்கப்படுபவை விவரம் இதோ...
நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் முதல் தொடங்க வாய்ப்பு உள்ளது.
தனியார் பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்.
மாநிலங்களில் பாதிப்பு நிலைமைக்கு ஏற்றவாறு பொதுப்போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்படலாம்
திரையரங்குகளுக்கு அடுத்த மாதமும் தடை தொடரவே வாய்ப்பு உள்ளது
பொதுக்கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை
பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் இறுதி வரை திறக்கப்பட வாய்ப்பு இல்லை