வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (17:31 IST)

உறவு மறுத்தால் விவாகரத்து: உயர் நீதிமன்றம்

கணவன்-மனைவி இருவரில் யார் தாம்பத்யத்துக்கு மறுத்தாலும் விவாகரத்து அளிப்பதில் தவறு இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 

 
டெல்லியை சேர்ந்த ஒருவர் அவருடைய மனைவி அவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுத்து வந்ததால், குடும்பல நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து அவருடைய மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கணவர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு விவாகரத்து அளிப்பதாகவும் கூறினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
 
திருமணம் என்றாலே அதில் தாம்பத்திய வாழ்க்கை நிச்சயமாக இருக்க வேண்டும். தாம்பத்திய வாழ்க்கை இல்லாத திருமணம் என்று ஒன்று இல்லை. இந்த வழக்கில் மனைவி தாம்பத்யத்துக்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார். இது ஒரு வகையில் கணவரை கொடுமைப்படுத்துவதாகும்.
 
எனவே, அவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து அளிக்கிறோம். கணவன்-மனைவி இருவரில் யார் தாம்பத்யத்துக்கு மறுத்தாலும் விவாகரத்து அளிப்பதில் தவறு இல்லை. மருத்துவ ரீதியாக பிரச்சினை இருந்தால் மட்டுமே அது வேறு மாதிரியாக அணுகப்படும், என்று தெரிவித்தனர்.