ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் செம்மரங்கள் ஆந்திராவில் பறிமுதல்


Suresh| Last Updated: புதன், 13 ஜனவரி 2016 (11:35 IST)
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

 
ஆந்திர மாநிலம் ஏர்பேடு வழியாக செம்மரம் கடத்தப்படுவதாக செம்மர தடுப்புப் பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
 
இந்த தகவலைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் வழி மறித்தனர். ஆனால் அந்த லாரி நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றது.
 
இந்நிலையில், அந்த லாரியை துரத்திச் சென்று மக்கிப் பிடித்தனர். அந்த லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
 
மேலும், செம்மரக் கடத்தல் தொடர்பாக வாகனத்தில் இருந்த 3 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :