வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (11:54 IST)

ஸ்டேட் வங்கியின் அதிரடி அபராதத்திற்கு இது தான் காரணம்!!

ஸ்டேட் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் ஏப்ரல் 1 முதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. 


 
 
அதன்படி மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50% வரை குறைவாக இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50% முதல் 75% குறைவாக இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75% சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 100 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும். 
 
அதேபோல் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்சமாக 3,000 ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 1,000 ரூபாயும் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
 
குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்க உள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், 10 கோடி ஜன்தன் கணக்குகளை பராமரிக்க அதிகம் செலவாகிறது. எனவே அதனை ஈடுகட்டவே குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா விளக்கமளித்துள்ளார்.