Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வங்கி பண கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி தகவல்!!

Last Modified: திங்கள், 13 மார்ச் 2017 (11:26 IST)

Widgets Magazine

வங்கி மற்றும் ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுக்க வைத்திருந்த கட்டுபாடுகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 
 
கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக உயர்மதிப்புடைய பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு  அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. 
 
ஆனால், தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததால் பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏடிஎம்-களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
 
இதனால், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து இருந்தது. பின்னர் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தது.
பிப்ரவரி 20-ம் தேதி முதல் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.24,000 இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது. 
 
மேலும், மார்ச் 13 ஆம் தேதியிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. அதன்படி இன்று முதல் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கூலிப்படையினர் மிரட்டல் ; வீட்டிலேயே இருக்க முடியவில்லை - தீபா ஓபன் டாக்

அரசியலில் இருந்து விலகும் படி கூலிப்படையினர் தன்னை மிரட்டுவதாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபா ...

news

15 திமுக எம்.எல்.ஏக்கள் விரைவில் அதிமுகவில்! - தினகரன் அதிர்ச்சி தகவல்

திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் ...

news

இன்னும் 4 வருடம் ; கட்டாய திருமணம் - கமல்ஹாசன் அதிரடி பேட்டி

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் என நடிகர் ...

news

டிரம்பின் முக்கிய கொள்கையை மீறிய மகள் இவாங்கோ

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிற நாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு ...

Widgets Magazine Widgets Magazine