1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (20:42 IST)

தமிழகத்தில் ரத்தன் டாடா உருவாக்க இருக்கும் நகரம்.. ஆச்சரிய தகவல்..!

tata
தமிழகத்தில் ஓசூர் அருகே டாடா புதிய நகரத்தை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

 தமிழகத்தின் ஓசூரில் ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது என்பதும் அதுமட்டுமின்றி தற்போது உற்பத்தி துறையை விரிவுபடுத்தும் வகையில் டாடா குழுமம் ஓசூரில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட இருப்பதாகவும் ஓசூர் அருகே டாடா தனது ஊழியர்களுக்காக இந்த நகரத்தை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நகரத்தில் டாடா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீடு கட்டு தரப்படும் என்றும் விரைவில் இந்த நகரம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என்றும் தமிழக அரசிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜாம்ஷெட்பூர் நகரம் டாடாவால் உருவாக்கப்பட்ட நிலையில் அதேபோன்று ஒரு நகரம் ஓசூர் அருகே அமைய இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva